விசிக மாநாட்டில் கம்யூனிஸ்டு தலைவர்கள்;மோடி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

mutharasan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-

புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவீதம் 500, 1000 ரூபாய் நோட்டுகளாகும்.

இந்த நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர சட்டத்தின் மூலமே பிரதமர் மோடி ஆட்சியை நடத்தி வருகிறார். மோடி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பதிலாக இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழித்து விட்டதாக டி.வி., ரேடியோ, பொதுக்கூட்டம் வாயிலாகவே பேசி வருகிறார்.

கருப்பு பணம் ஒழிப்பு அறிவிப்பால் ஏற்பட்ட சிரமங்களுக்கு பிரதமர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு முத்தரசன் பேசினார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-

செல்லாது நோட்டு அறிவிப்பால் தலித்துகள், ஒடுக்கப்பட்ட, ஏழை- எளிய மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் முதலாளிகளான அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்றோர் பாதிக்கப்படவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கடந்த 2012-ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. ஆனால், குழுவின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. பொருளாதார நிபுணர்கள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுவையில் மொத்தம் உள்ள 29 ஆயிரம் கடைகளில் 400 பேரிடம் மட்டுமே ‘ஸ்வைப்’ எந்திரம் உள்ளது. அந்த 400 பேர்தான் வியாபாரம் செய்கின்றனர்.

மோடி அரசின் செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் நல கூட்டியக்கம் போராடும். வைகோ விலகி சென்றாலும், மக்கள் நலக்கூட்டியக்கம் உறுதியுடன் இயங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top