மோடியின் பண மதிப்பிழப்புக்கு பிறகு ரூபே கார்டு பயன்பாடு 7 மடங்கு உயர்வு: என்சிபிஐ தகவல்

 

npi-payement

மோடியின் பண மதிப்பிழப்புக்கு   பிறகு ரூபே கார்டு பயன்பாடு ஏழு மடங்கு உயர்ந்துள்ளதாக நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் (என்சிபிஐ) தெரிவித்துள்ளது. நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு தினசரி 21 லட்சம் பரிவர்த்தனைகள் நடக்கின்றன.என தெரிவிக்கின்றது

பாயின்ட் ஆப் சேல் மெஷின்கள், இ-காமர்ஸ் தளங்கள் உள்ளிட்டவை மூலம் முன்பு ஒரு நாளைக்கு 3 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்தன. ஆனால் இப்போது 21 லட்சம் பரிவர்த்த னைகள் நடப்பதாக என்சிபிஐ நிர்வாக இயக்குநர் ஏபி ஹூடா தெரிவித்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ரூபே கார்டுகள் மூலமாக 50 லட்சம் பரிவர்த்தனைகள் நடப் பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 31.7 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் ஜன் தன் வங்கி கணக்குக்காக 20.5 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

npci-unified-payment

கடந்த நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது. புதிய ரூபாய் நோட்டு கள் புழக்கத்தில் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் மக்கள் கார்டுகளை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். ஒருவேளை பண மதிப்பிழப்பை அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால், இவ்வளவு தூரம் கார்டு மூலம் பரிவர்த்தனை நடப்பதற்கு அதிக உழைப்பும் நேரமும் தேவைப்பட்டிருக்கும் என ஹூடா தெரிவித்தார்.

மேலும் ரூபே கார்டு பரிவர்த்தனை ஏழு மடங்காக உயர்ந்தாலும் இந்த எண்ணிக்கை எங்க ளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஒரு நாளைக்கு 5 லட்சம் பரிவர்த்தனைகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். இந்த இலக்கை அடைய இன்னும் ஒரு வருடம் ஆகும் என ஹூடா தெரிவித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top