இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 32 பேர் விடுதலை.

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 32 பேர் விடுதலை.

இலங்கை சிறையில் இருந்த 32 தமிழக மீனவர்களையும் விடுவிக்கும்படி ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் இருந்த 32 மீனவர்களும் இன்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், அவர்களின் 8 படகுகளையும் விடுவிக்க அவர் ஆணையிட்டார். ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த இந்த 32 மீனவர்களும் கடந்த 3-ம் தேதி ...

மேலும் படிக்க »

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு

நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தமிழகத்தில்18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருப்பூர், சிவகங்கை, புதுச்சேரி, கடலூர், திருவள்ளூர், தருமபுரி, தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, வடசென்னை, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை, விழுப்புரம் தொகுதிகளில் ...

மேலும் படிக்க »

கன்னியாகுமரி தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தை துவங்குகிறார் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தை துவங்குகிறார் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜரத்தினத்தை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். கன்யாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்குட்ப்பட்ட களியக்காவிளையில் மாலை 3 மணியளவில் ஸ்டாலின் பிரசாரம் தொடங்குகிறார். 3. 30-க்கு குழித்துறை பகுதியிலும், 4 மணிக்கு மார்த்தாண்டம் பகுதியிலும் அவர் வாக்கு சேகரிக்க உள்ளார். பின்னர், கிள்ளியூர் ...

மேலும் படிக்க »

சென்னையில் தேமுதிக மாநில நிர்வாகிகள் கூட்டம்: வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாகத் தகவல்

சென்னையில் தேமுதிக மாநில நிர்வாகிகள் கூட்டம்: வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாகத் தகவல்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளின் வெற்றி வாய்ப்புகள், பிரசார பணிகள், தேர்தல் உத்திகள், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுடன் இணைந்து ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து ...

மேலும் படிக்க »

மு.க. அழகிரி – ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மு.க. அழகிரி – ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

நடிகர் ரஜினியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளவருமான மு.க.அழகிரி நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இச்சந்திப்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மு.க.அழகிரி திரைப்பட ...

மேலும் படிக்க »

அமெரிக்க கப்பலுக்கு டீசல் வழங்கிய வழக்கு: சாத்தூரைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது!

அமெரிக்க கப்பலுக்கு டீசல் வழங்கிய வழக்கு: சாத்தூரைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது!

அமெரிக்க ஆயுதக் கப்பலுக்கு டீசல் வழங்கிய வழக்கில் மேலும் ஒருவரை க்யூ பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்ததாக கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்து 12 இந்தியர்கள் உள்பட 35 ஊழியர்கள் ...

மேலும் படிக்க »

தேர்தல் சுவர் விளம்பரங்கள் எழுதினால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

தேர்தல் சுவர் விளம்பரங்கள் எழுதினால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் யாரேனும் தேர்தலுக்கான சுவர் விளம்பரங்கள் எழுதி இருந்தால் அது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை உதவி தேர்தல் அலுவலர்கள், கூடுதல் ...

மேலும் படிக்க »

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தேர்வை எழுத விரும்பினால், தக்கல் முறையில் விண்ணப்பித்து தேர்வை தொடரலாம் என முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மார்ச் 2014 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, ...

மேலும் படிக்க »

மதுரையில் பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு!

மதுரையில் பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு!

மதுரை நெல்லூர்பேட்டையில் இன்று அதிகாலையில் வெடிகுண்டு வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை நெல்லூர்பேட்டையில் மசூதி அருகில் வைக்கப்பட்டிருந்த சணல் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ...

மேலும் படிக்க »

மு.க.அழகிரி விரும்பினால் காங்கிரஸில் சேர்க்கத் தயார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மு.க.அழகிரி விரும்பினால் காங்கிரஸில் சேர்க்கத் தயார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மு.க. அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் விரும்பினால், அவர்களை காங்கிரஸில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக.விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரி, தனது ஆதரவு எம்.பி.க்களுடன் சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் எங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top