சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் தமிழர் எழுச்சி இளைஞர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், எஸ்.டி.பி.ஐ, தமிழர் விடுதலை கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன. ...

மேலும் படிக்க »

குரூப்-4 பணிகளுக்கான கலந்தாய்வு சென்னையில் துவக்கம்

குரூப்-4 பணிகளுக்கான கலந்தாய்வு சென்னையில் துவக்கம்

குரூப்-4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று (திங்கள் கிழமை) துவங்கியது. தமிழக அரசு பணியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவி களில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதிய இந்த தேர்வின் முடிவு மார்ச் 5-ம் தேதி வெளியானது. தேர்வில் குறைந்தபட்ச ...

மேலும் படிக்க »

தி.மு.க.வில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கம்: கருணாநிதி அறிவிப்பு!

தி.மு.க.வில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கம்: கருணாநிதி அறிவிப்பு!

தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி சென்னை அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் எஸ்.ஆர்.கோபி தனது சகோதரர்களுடன் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து இவ் அறிவிப்பை விடுத்துள்ளார் கருணாநிதி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, மேலும் மேலும் தி.மு.க.வை விமர்சிக்கும் ...

மேலும் படிக்க »

புதுவையில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் ரத்து!

புதுவையில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் ரத்து!

புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டணி குழப்பம் காரணமாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் புதுச்சேரியில் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவை அங்கம் வகித்துள்ளது. இந்த கூட்டணியில் ...

மேலும் படிக்க »

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் 200 பேர் உண்ணாவிரதப் போராட்டம்!

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் 200 பேர் உண்ணாவிரதப் போராட்டம்!

நீதிமன்றதிற்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதற்கு முன்பாக தங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்க வலியுறுத்தி சென்னை புழல் சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புழல் சிறையில் 800-க்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 200 பேர் திங்கள்கிழமை காலை உண்ணாவிரதம் ...

மேலும் படிக்க »

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வரும் 27ஆம் தேதிக்குள் நட்சத்திரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் ...

மேலும் படிக்க »

மீண்டும் மீனவர்கள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

மீண்டும் மீனவர்கள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

கொழும்பில் இன்று (25-03-2014) நடைபெற இருந்த இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஜனவரி 27-ம் தேதி சென்னையில் மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக். நீரிணைப்பு பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லையில் ...

மேலும் படிக்க »

பாமக வேட்பாளரை திரும்ப பெற ராமதாசுடன் பேச்சு: ரங்கசாமி

பாமக வேட்பாளரை திரும்ப பெற ராமதாசுடன் பேச்சு: ரங்கசாமி

புதுச்சேரியில் பா.ம.க. வேட்பாளரை திரும்பப் பெறச் செய்வது குறித்து அக்கட்சித்தலைவர் ராமதாசுடன் பேச்சு நடத்தப்படும் என அம்மாநில முதல்வரும் , என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்கள் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுகிறார். இதை பா.ஜ.க. தலைவர்களும் உறுதி ...

மேலும் படிக்க »

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட தடை!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட தடை!

உயர் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட முயன்றவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தமிழில் வாதாடினார். சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த முகுல் சந்த் போத்ரா என்பவர் நடிகை ரோஜா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மீது செக் மோசடி வழக்கு தொடந்தவர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி ...

மேலும் படிக்க »

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் அமைப்பினர் கைது!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் அமைப்பினர் கைது!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பல்வேறு தமிழ் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் உள்ள  பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து இன்று காலை 11 மணியளவில் சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தினை நடத்தினர். இப்போராட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினர். தந்தை பெரியார் கழகத்தின் ...

மேலும் படிக்க »
Scroll To Top