வைகை அணையின் நீர்மட்டம் 49 அடியாக குறைவு!

வைகை அணையின் நீர்மட்டம் 49 அடியாக குறைவு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 49 அடியாக குறைந்தது. மதுரை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை, கடந்த 2 ஆண்டுகளாக முழு கொள்ளவை எட்டவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழையின் பயனாக, வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 5-ம் தேதி 52 ...

மேலும் படிக்க »

வீராணம் மற்றும் கீழணை ஏரியில் நாளை தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

வீராணம் மற்றும் கீழணை ஏரியில் நாளை தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட பாசன பகுதிகளின் சாகுபடிக்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன்மூலம், கடலூர், தஞ்சாவூர் மற்றும் ...

மேலும் படிக்க »

பூரண மதுவிலக்கு: உம்மன்சாண்டிக்கு பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர்!

பூரண மதுவிலக்கு: உம்மன்சாண்டிக்கு பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர்!

பூரண மதுவிலக்கை அமல்படுத்த விரும்பும் உம்மன்சாண்டியின் நடவடிக்கையை முழு மனதோடு வரவேற்கிறேன் என்று மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் கூறினார். திருவனந்தபுரத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கேரளாவில் முதல்வர் உம்மன்சாண்டி பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்தேன். இதை முழு மனதோடு வரவேற்கிறேன். அவரது துணிச்சலான செயல்பாட்டை பாராட்டுகிறேன். ...

மேலும் படிக்க »

சுப்பிரமணியசாமியை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்க வேண்டும்: பண்ருட்டி வேல்முருகன்

சுப்பிரமணியசாமியை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து  நீக்க வேண்டும்:  பண்ருட்டி வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.அக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியதாவது, ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தில் பேச அனுமதிக்க கூடாது, ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக்குகுழுவை இங்குள்ள ஈழத்தமிழர்களிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும், அவர்களுக்கு ...

மேலும் படிக்க »

பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டமே நடைமுறைப்படுத்தப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு!

பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டமே நடைமுறைப்படுத்தப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு!

2014 ஆம் ஆண்டு சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் பயிரிடப்படும் நெல் மற்றும் ரபி பருவத்தில் பயிரிடப்படும் இதர பயிர்களுக்கு புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக, பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ...

மேலும் படிக்க »

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. கடந்த நான்கு தினங்களில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கணிசமாக சரிந்துள்ளது. சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 8 ரூபாய் விலை குறைந்து 2 ஆயிரத்து 685 ரூபாயாக உள்ளது. 22 காரட் ...

மேலும் படிக்க »

சீன, அரபு மொழிகளில் விரைவில் வெளியாகிறது திருக்குறள்!

சீன, அரபு மொழிகளில் விரைவில் வெளியாகிறது திருக்குறள்!

அரபு மற்றும் சீன மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது.தமிழ் அறிஞர்கள் தமிழில் எழுதிய அறிவுரைகள், கவிதைகள் போன்றவற்றை உலகிலேயே அதிகமாக பேசப்படும் மொழிகளில் மொழிபெயர்ப்பதை தமிழக அரசு கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், பாரதியார், பாரதிதாசனின் கவிதைகள் மற்றும் புகழ்பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம், சீனம், அரபி மொழிகள் ...

மேலும் படிக்க »

ஆவின் பால் கலப்பட விவகாரம்: ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் கைது!

ஆவின் பால் கலப்பட விவகாரம்: ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் கைது!

விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் சென்னை கொண்டு வரப்படும் ஆவின் பால் திருடப்பட்டு அதற்கு பதிலாக தண்ணீர் சேர்த்து சிலர் மோசடி செய்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. திண்டிவனம் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தின் வனப்பகுதியில் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒவ்வொரு டேங்கர் லாரியில் இருந்தும் குறிப் பிட்ட அளவுபால் ...

மேலும் படிக்க »

பாஸ்போர்ட் பெற தபால் நிலையத்தில் விண்ணப்பம் செய்யலாம்: மண்டல அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் பெற தபால் நிலையத்தில் விண்ணப்பம் செய்யலாம்: மண்டல அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் பெற தபால் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மண்டல அதிகாரி கூறியுள்ளார். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணிஸ்வரராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, முன் பதிவு செய்வதற்கான வசதி கீழ் கண்ட தபால் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக தபால் ...

மேலும் படிக்க »

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பால் கொள்முதல் விலையை நியாயமான அளவுக்கு உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்: “ஆவின் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top