பாமக வேட்பாளரை திரும்ப பெற ராமதாசுடன் பேச்சு: ரங்கசாமி

பாமக வேட்பாளரை திரும்ப பெற ராமதாசுடன் பேச்சு: ரங்கசாமி

புதுச்சேரியில் பா.ம.க. வேட்பாளரை திரும்பப் பெறச் செய்வது குறித்து அக்கட்சித்தலைவர் ராமதாசுடன் பேச்சு நடத்தப்படும் என அம்மாநில முதல்வரும் , என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்கள் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுகிறார். இதை பா.ஜ.க. தலைவர்களும் உறுதி ...

மேலும் படிக்க »

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட தடை!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட தடை!

உயர் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட முயன்றவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தமிழில் வாதாடினார். சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த முகுல் சந்த் போத்ரா என்பவர் நடிகை ரோஜா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மீது செக் மோசடி வழக்கு தொடந்தவர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி ...

மேலும் படிக்க »

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் அமைப்பினர் கைது!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் அமைப்பினர் கைது!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பல்வேறு தமிழ் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் உள்ள  பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து இன்று காலை 11 மணியளவில் சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தினை நடத்தினர். இப்போராட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினர். தந்தை பெரியார் கழகத்தின் ...

மேலும் படிக்க »

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

சென்னை துறைமுகம்- மதுரவாயல் சாலை திட்டத்தை ஆரம்பத்திலேயே எதிர்க்காததது ஏன், என்று தமிழக அரசுக்கு உசச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பறக்கும் சாலை ...

மேலும் படிக்க »

புதுச்சேரி பா.ம.க வேட்பாளரை அறிவித்தார் ராமதாஸ்!

புதுச்சேரி பா.ம.க வேட்பாளரை அறிவித்தார் ராமதாஸ்!

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க சார்பில் ஆர்.கே.ஆர்.அனந்தராமன் போட்டியிடுவார் என்று அக்கட்சி  அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 24.04.2014 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக ஆர்.கே.ஆர்.அனந்தராமன் போட்டியிடுவார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் ...

மேலும் படிக்க »

மதிமுக, பாஜகவைத் தொடர்ந்து காங். வேட்பாளரும் மு.க.அழகிரியுடன் சந்திப்பு!

மதிமுக, பாஜகவைத் தொடர்ந்து காங். வேட்பாளரும் மு.க.அழகிரியுடன் சந்திப்பு!

ம.தி.மு.க., பா.ஜ.க.வைத் தொடர்ந்து மதுரையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் மு.க.அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டார். முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தி.மு.க. தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரியை மதுரையில் இன்று காலை, தேனி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேடட்பாளர் அழகுசுந்தரமும், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவும் சந்தித்து தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் ...

மேலும் படிக்க »

விழுப்புரம் அருகே 1000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் அருகே 1000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் பைபாஸ்ரோடு பகுதியில் இன்று காலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி குமாரி தலைமையில் அதிரடி வாகன சோதனை நடந்தது. அந்த வழியாக அடுத்தடுத்து வேகமாக வந்த ஒரு வேன், ஜீப்பை அவர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த வாகனங்களை சோதனை செய்தபோது 2300 டெட்டனேட்டர் குச்சிகள், 1000 கிலோ வெடி பொருட்கள் இருந்தன. ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேச்சு

காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேச்சு

தமிழர் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார். தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவனை ஆதரித்து, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:– கருணாநிதியும், தி.மு.க.வினரும் அரிசி பருப்பு போன்ற பொருட்களின் ...

மேலும் படிக்க »

அழகிரியுடன் ம.தி.மு.க, பா.ஜ.க வேட்பாளர்கள் சந்திப்பு!

அழகிரியுடன் ம.தி.மு.க, பா.ஜ.க வேட்பாளர்கள் சந்திப்பு!

முன்னாள் தி.மு.க. தென் மண்டல அமைப்பாளர் மு.க.அழகிரியை, தேனி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் அழகுசுந்தரமும், சிவங்கை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவும் சந்தித்துப் பேசினர். சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா, மதுரையில் உள்ள அழகிரி இல்லத்தில் இன்று காலை 10.25 மணிக்கு சென்றார். அப்போது, அழகிரி அவரை வரவேற்றார். சுமார் அரை நேரம் ...

மேலும் படிக்க »

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திருநங்கை வேட்பாளர் போட்டி

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திருநங்கை வேட்பாளர் போட்டி

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் திருநங்கையான பாரதி கண்ணம்மா போட்டியிடுகிறார். எம்.பி தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையை சேர்ந்த பாரதி கண்ணம்மா (53) நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்துள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்று கூறப்படுகிறது. பாரதி கண்ணம்மா, மதுரை தியாகராஜர் ...

மேலும் படிக்க »
Scroll To Top