மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன்: கருணாநிதி!

மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன்: கருணாநிதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது. மக்களின் இந்த முடிவை, “மக்கள் குரலே மகேசன் குரல்” என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ...

மேலும் படிக்க »

திமுக படுதோல்வி: மகிழ்ச்சியில் அழகிரி!

திமுக படுதோல்வி: மகிழ்ச்சியில் அழகிரி!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியடைந்துள்ள நிலையில்,  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திமுகவில் கட்சித் தலைமையை கைப்பற்றுவது யார் என்பதில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி மகன்களான மு.க. அழகிரிக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், ஸ்டாலினின் கையே ஓங்கியது. இந்நிலையில் மதுரை திமுகவிலிருந்து ...

மேலும் படிக்க »

தர்மபுரி: பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி!

தர்மபுரி: பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி!

தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வக்கீல் மோகனும், தி.மு.க. சார்பில் தாமரைச் செல்வன் எம்.பி.யும், பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாசும் காங்கிரஸ் சார்பில் வாழப்பாடி ராம.சுகந்தனும் போட்டியிட்டனர். மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். இதில் முதல் சுற்றில் அன்புமணி ராமதாஸ், 27,000 வாக்குகள் ...

மேலும் படிக்க »

விடுதலைப் புலிகள் மீதான தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

விடுதலைப் புலிகள் மீதான தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகள் மீது கடந்த 1991ஆம் ஆண்டு இந்திய அரசு முதலில் தடை விதித்தது. அதிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடையை நீட்டிப்பு செய்து வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நாளை வாக்கு ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் காலை 10 மணி முதல் வெளியாகும்

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் காலை 10 மணி முதல் வெளியாகும்

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக 73.68 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 64.47 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 42 ...

மேலும் படிக்க »

சொத்துக் குவிப்பு வழக்கு: இடைக்கால தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கு: இடைக்கால தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், முடக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிக்கக் கோரி தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த பிறகு, பிரதான வழக்கை தொடர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ...

மேலும் படிக்க »

மே 17 முதல் தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் தகவல்!

மே 17 முதல் தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாக தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மே 17ம் தேதி பருவமழை தொடங்கும் என்றும், வழக்கமாக தென்மேற்கு பருவமழை மே 20ம் தேதி தொடங்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

2-வது நாளாக தொடரும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்!

2-வது நாளாக தொடரும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்!

தமிழகத்தில் 20 மையங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப படிவங்கள் இரண்டாவது நாளாக இன்றும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.நேற்று ஒரு நாளில் மட்டும் 12,138 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. 383 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 2,172 இடங்கள் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு!

தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு!

தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் காற்றாலை மூலம் மட்டும் 1,165 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தென்மேற்கு பருவக் காற்று வீசத் துவங்கியுள்ளதால் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவக்காற்று மே 10ஆம் தேதி வீசத் துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு!

பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு!

கன்னியாகுமரியில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனைனையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க யுனஸ்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இன்று தில்லியில்  யுனெஸ்கோ அமைப்பினரைச் சந்தித்த கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் கே.சி. ஜோசப், கூறும்போது புதிய பாரம்பரிய சின்னங்கள் தேர்ந்தெடுப்பதற்கான வரைவுப் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனையும் இடம் பெற்றுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக ‘உலக பாரம்பரிய சின்னம்’ என்று ...

மேலும் படிக்க »
Scroll To Top