சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம்

சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம்

திடீரென அதிரடியாக சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து நகரங்களில் என்.ஐ.ஏ சோதனை தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக என்ஐஏ தமிழகத்தில் முகாமிட்டு பல இஸ்லாமியர்களை கைது செய்து இருக்கிறது. சமீபத்தில் என்ஐஏ- தேசிய புலனாய்வு பிரிவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா ஒன்று நாடாளுமன்ற ...

மேலும் படிக்க »

சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு

சட்டசபையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்; மத்திய அரசின் நெக்ஸ்ட்தேர்வு; திமுக-அதிமுக எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டு வர உள்ள நெக்ஸ்ட் தேர்வுக்கு தமிழக சட்டசபையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக எம்பிபிஎஸ் இறுதியாண்டில் நெக்ஸ்ட் என்ற பெயரில் பொதுவான தேர்வாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் ...

மேலும் படிக்க »

அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் ஒன்று சேர்ந்துகொண்டு தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலை ஏதாவது காரணம் சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தன தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அக்டோபர் மாதம் அறிவிக்கவேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.தமிழக அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகத்தான் இருக்கிறது தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி வக்கீல் ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது!

மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே  அரசு ஒதுக்கீட்டில் இடம்  கிடைத்துள்ளது!

மருத்துவ படிப்பிற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு நீட் தேர்வு கொண்டுவந்ததிலிருந்து தமிழகத்தின் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் நல்ல படிக்கின்ற குழந்தைகளாக இருந்தாலும் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இதுவரை இடம் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி ...

மேலும் படிக்க »

தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை

தமிழகம் –கேரளா  மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா மற்றும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஜூன்1ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே மழைப்பெய்ய தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களுக்கான 40.43 டி.எம்.சி. நீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மழை அளவைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படுவதை, கர்நாடக அரசு உறுதி ...

மேலும் படிக்க »

தமிழக மக்களை ஏமாற்றிய மத்திய மாநில அரசுகள்; 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டது நீட் மசோதா

தமிழக மக்களை ஏமாற்றிய மத்திய மாநில அரசுகள்; 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டது நீட் மசோதா

ஐகோர்ட்டில் மத்திய அரசு மறைக்கமுடியாமல் ‘நீட்’ மசோதாக்கள் 2017-ம் ஆண்டே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டன என்று உண்மையை கூறி அறிக்கை தாக்கல் செய்தது. தமிழ்நாட்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ‘நீட்’ ...

மேலும் படிக்க »

முகிலன் மீது பாலியல் புகார்; திட்டமிட்டு சிதைக்கப்படும் போராளிகளின் பிம்பம் ஒரு பார்வை

முகிலன் மீது பாலியல் புகார்; திட்டமிட்டு சிதைக்கப்படும் போராளிகளின் பிம்பம் ஒரு பார்வை

கடத்தப் பட்டு நேற்று ஆந்திராவில் மீட்கப்பட்ட சமூக,சுற்றுச்சூழல் போராளி முகிலன் தமிழகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே தயாராக பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.இது போன்றுதான் தெகல்கா பத்திரிக்கையின் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதும் விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜூலியன் அசாஞ்சே மீதும் பாலியல் வழக்கு போடப்பட்டது என்பது ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு : ஐகோர்ட்டில் தகவல்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு : ஐகோர்ட்டில் தகவல்

‘நீட்’ தேர்வுக்கு எதிரான தமிழக சட்டசபை மசோதாவை மத்திய பாஜக அரசு நிராகரித்துவிட்டதாக இப்போது செய்திகள் வருகிறது. இதுவரை இது ஏன் மறைக்கப்பட்து தமிழக மக்களை ஏன் இரு அரசுகளும் ஏமாற்றியது?   தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாக்களை, மத்திய அரசு நிராகரித்து விட்டதாக ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »

சமூகப் போராளி முகிலனை நாய் கடித்துள்ளது; சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்

சமூகப் போராளி முகிலனை நாய் கடித்துள்ளது; சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் முகிலனை நாய் கடித்துள்ளதாக  தகவல் வெளிவந்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர். திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை போலீசார் அழைத்து சென்ற வீடியோவும் வெளியானது. இதன்படி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக ...

மேலும் படிக்க »
Scroll To Top