காஷ்மீரில் பனிப்பாறை சரிவில் சிக்கிய 75 பேர் மீட்பு

காஷ்மீரில் பனிப்பாறை சரிவில் சிக்கிய 75 பேர் மீட்பு

வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த பனிப்பாறை சரிவில் சிக்கிய நூறு பேரில் 75 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 25 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குப்வாராவுக்கும் தங்தாருக்கும் இடையே உள்ள சத்னா பாஸ் என்ற பகுதியில் இந்த பனிப்பாறை சரிவு நிகழ்ந்ததாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ...

மேலும் படிக்க »

எஸ்.எம்.எஸ் மூலம் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம் அறியலாம்!

எஸ்.எம்.எஸ் மூலம் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு  நிலவரம் அறியலாம்!

முன்பதிவு ரயில் டிக்கெட் நிலவரம் பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் இலவசமாக தெரிவிக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி தொடக்கத்தில், குறிப்பிட்ட ராஜ்தானி ரயில்களில், பயணிகள் இறுதிப்பட்டியல் வெளியானதற்கு பிந்தைய நிலவரம் மட்டும், பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். பின்னர்  மற்ற எக்ஸ்பிரஸ், மெயில்களில், இறுதிப்பட்டியல் வெளியானதற்கு பிந்தைய நிலவரம் தெரிவிக்கப்படும். இதன் தொடர்ச்சியாக, எல்லா ...

மேலும் படிக்க »

குண்டு வெடிப்பு நடக்கும் ஆபத்தான நாடுகளின் பட்டியல் : இந்தியாவுக்கு மூன்றாம் இடம்

குண்டு வெடிப்பு நடக்கும் ஆபத்தான நாடுகளின் பட்டியல் : இந்தியாவுக்கு மூன்றாம் இடம்

உலக அளவில், குண்டு வெடிப்பு அதிகம் நிகழும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளதாக தேசிய குண்டு வெடிப்பு புள்ளி விவர மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், முதல் இடத்தில் ஈராக்கும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் இடம்பிடித்துள்ளன. இந்தியா உட்பட இந்த மூன்று நாடுகளிலுமே ஒட்டு மொத்த குண்டு வெடிப்புகளில் ...

மேலும் படிக்க »

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு!

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு!

ரூபாய் நோட்டுக்களில் ஆண்டு குறிப்பிடப்படாதவற்றை  மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரூபாய் நோட்டுக்களில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு ஆண்டின் எண்கள் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் ஆண்டும் அச்சிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுக்களான, 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுக்களை இந்தாண்டு ஜூனுக்குள் மாற்றிக்கொள்ளுமாறும், அதன்பிறகு பழைய ...

மேலும் படிக்க »

மோடி ஹைதராபாத்தில் போட்டியிடத் தயாரா?: மஜ்லிஸ் முஸ்லிம் கட்சி தலைவர் ஓவைசி அசாதுதன் சவால்

மோடி ஹைதராபாத்தில் போட்டியிடத் தயாரா?: மஜ்லிஸ் முஸ்லிம் கட்சி தலைவர் ஓவைசி அசாதுதன் சவால்

ஹைதராபாத் தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி போட்டியிடத் தயாரா என மஜ்லிஸ் முஸ்லிம் கட்சி தலைவர் ஓவைசி அசாதுதன் சவால் விடுத்துள்ளார். ஆந்திராவில் மஜ்லிஸ் முஸ்லிம் கட்சிக்கு (எம்.ஐ.எம்.) ஐதராபாத்தில் செல்வாக்கு உள்ளது. இக்கட்சியின் தலைவர் ஒவைசி அசாதுதீன் ஐதராபாத் தொகுதி எம்.பி.யாக உள்ளார். மஜ்லிஸ் கட்சியின் 56–வது ஆண்டு விழா ஐதராபாத்தில் ...

மேலும் படிக்க »

போர் விமான என்ஜின் வாங்கியதில் ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு!

போர் விமான என்ஜின் வாங்கியதில் ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு!

இந்திய போர் விமானத்துக்கு என்ஜின் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார். இந்திய விமானப்படையில் 2007-2011 ஆம் ஆண்டுகளில், போர் விமானத்துக்கு என்ஜின் வாங்கியதில், ராணுவ அதிகாரிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த பாதுகாப்புத் துறை அமைச்சர்ர் ...

மேலும் படிக்க »

பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் சரிவுடன் துவக்கம்!

பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் சரிவுடன் துவக்கம்!

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பங்குச்சந்தை மற்றும் அந்நியச் செலாவணிச் சந்தையில் வர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்று, காலை வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 54.16 புள்ளிகள் குறைந்து 21,065.96 புள்ளிகளாகவும் நிப்டி 14.95 புள்ளிகள் குறைந்து 6,262.00 புள்ளிகளாகவும் இருந்தது. ஜப்பானின் நிக்கெய் பங்குச்சந்தையும், ஹாங்காங்கின் ஹாங் செங் பங்குச்சந்தையிலும் வர்த்தகம் சரிவுடன் ...

மேலும் படிக்க »

பாராளுமன்ற தேர்தல் தேதி 2 நாளில் அறிவிப்பு : ஏப்ரல் 7–ந்தேதி ஓட்டுப்பதிவு தொடக்கம்?

பாராளுமன்ற தேர்தல் தேதி 2 நாளில் அறிவிப்பு : ஏப்ரல் 7–ந்தேதி ஓட்டுப்பதிவு தொடக்கம்?

15–வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 1–ந்தேதியுடன் முடிவடைகிறது. மே 31–ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு முன்பு தேர்தல் முடிந்து எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கான பணிகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற ...

மேலும் படிக்க »

அலைக்கற்றை ஒதுக்கீடு மே மாதம் தொடக்கம்- 4ஜி சேவையை அளிக்க ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டம்

அலைக்கற்றை ஒதுக்கீடு மே மாதம் தொடக்கம்- 4ஜி சேவையை அளிக்க ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டம்

கடந்த மாதம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு மே மாதத்தில் ஒதுக்கீடு ஆரம்பமாகும் என தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக் கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடைபெற்றது. ஏலம் பெற்ற நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு மே மாதம் ஆரம்பமாகும் என்று தொலைத் தொடர்புத்துறைச் செயலர் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் சாலை விபத்தில் 4பேர் பலி!

ஆந்திராவில் சாலை விபத்தில் 4பேர் பலி!

ஆந்திர மாநிலம் நகரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த லட்சுமி, ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் காரில் திருப்பதிக்கு சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நகரி பகுதியை அடுத்த தடுக்குப்பேட்டையை அடையும் போது அவர்கள் பயணித்த கார் திடீரென தடுப்புச் சுவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top