பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சே நாளை டெல்லி வருகை!

பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சே நாளை டெல்லி வருகை!

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நாளை டெல்லி வருகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ராஜபக்சே, புதிய பிரதமராகும் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடுவார் எனத் தெரிகிறது. ...

மேலும் படிக்க »

நாகாலாந்து முதல்வர் திடீர் பதவி விலகல்!

நாகாலாந்து முதல்வர் திடீர் பதவி விலகல்!

நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் நாகாலாந்து மாநில முதல்வர் பதவியில் இருந்து நெபியு ரியோ விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஷ்வணி குமாரிடம் நேற்று வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். புதிய முதல்வராக டி.ஆர்.ஜெலியாங் இன்று மாலை பதவியேற்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க »

பா.ஜ.க மூத்த தலைவர்களுடன் மோடி சந்திப்பு: மத்திய அமைச்சரவையை அமைப்பது குறித்து ஆலோசனை!

பா.ஜ.க மூத்த தலைவர்களுடன் மோடி சந்திப்பு: மத்திய அமைச்சரவையை அமைப்பது குறித்து ஆலோசனை!

மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் அளிப்பது என்பது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் 14 ஆவது பிரதமராக நரேந்திர மோடி, நாளை மறுதினம் பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.குஜராத் புதிய ...

மேலும் படிக்க »

மோடி அழைத்தால் சேர்ந்து வாழத்தயார்: மனைவி யசோதா பென்

மோடி அழைத்தால் சேர்ந்து வாழத்தயார்: மனைவி யசோதா பென்

பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி தம்மை அழைத்தால் அவருடன் சேர்ந்து வாழத்தயார் என்று இளம்வயதிலேயே பிரிந்த அவரது மனைவி யசோதா பென் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடிக்கும், யசோதா பென் என்ற பெண்ணுக்கும் இளம் வயதில் திருமணம் நடந்ததாகவும், குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து விட்டதாகவும், ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.மோடியும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, வேட்பு ...

மேலும் படிக்க »

பீகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பு: ஐக்கிய ஜனதா தளம் அரசு வெற்றி!

பீகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பு: ஐக்கிய ஜனதா தளம் அரசு வெற்றி!

பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் அரசு வெற்றி பெற்றுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 22 இடங்களைக் கைப்பற்றியது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களையும், ஜக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தலா இரண்டு இடங்களையும் கைப்பற்றின. ...

மேலும் படிக்க »

பதவியேற்பில் பங்கேற்க மோடியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்: வைகோ

பதவியேற்பில் பங்கேற்க மோடியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்: வைகோ

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 26-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்காக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ...

மேலும் படிக்க »

அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு!

அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா தலைவர் நிதின்கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், அவரது நீதிமன்ற காவலை வருகிற ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால் ஜாமீன் பத்திரம் அளிக்க மறுத்ததை தொடர்ந்து அவரை இன்றுவரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ...

மேலும் படிக்க »

ராஜபக்சே வருகைக்கு கடும் எதிர்ப்பு: ராஜ்நாத் சிங்குடன் வைகோ சந்திப்பு!

ராஜபக்சே வருகைக்கு கடும் எதிர்ப்பு: ராஜ்நாத் சிங்குடன் வைகோ சந்திப்பு!

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வது குறித்து, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். மோடி வரும் 26ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் இலங்கை ...

மேலும் படிக்க »

தேர்தல் தோல்வி எதிரொலி: சமாஜ்வாடி கட்சியின் உத்தரபிரதேச அமைப்பு அடியோடு கலைப்பு!

தேர்தல் தோல்வி எதிரொலி: சமாஜ்வாடி கட்சியின் உத்தரபிரதேச அமைப்பு அடியோடு கலைப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், 80 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாதி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் 36 பேரை இரு தினங்களக்கு முன்பு நீக்கி ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவின் செயல்பாடுகளை பொறுத்தே தனி ஈழம் அமைய வாய்ப்பு: பொன். ராதாகிருஷ்ணன்

ராஜபக்சேவின் செயல்பாடுகளை பொறுத்தே தனி ஈழம் அமைய வாய்ப்பு: பொன். ராதாகிருஷ்ணன்

பா.ஜ.க.வின் தமிழ் மாநில தலைவரான பொன். ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் தங்கள் கட்சி தலைமையகமான கமலாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; ராஜபக்சேவை தனிப்பட்ட முறையில் பா.ஜ.க விருந்துக்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்த சார்க் நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டதில் அதில் இடம்பெற்றுள்ள இலங்கைக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் கட்சி ராஜபக்சேவை அழைத்தற்கும், ...

மேலும் படிக்க »
Scroll To Top