Author Archives: panneer

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு பேருந்துகள்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு பேருந்துகள்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் ஊட்டியில் இன்று (வெள் ளிக்கிழமை) முதல் சுற்றுப் பஸ்கள் இயக்கப்படு வதாக நீலகிரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் நடராஜ் தெரிவித்தார். சுற்றுலா தலங்கள் நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்து விளங்குகிறது. ஆண்டு முழுவதும் குளு, குளு கால நிலை நிலவுவதால் ...

மேலும் படிக்க »

தேவாலயங்களில் கன்னடத்தில் வழிபாடு: கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பு வலியுறுத்தல்

கர்நாடகத்தில் தேவாலயங்களில் வழிபாட்டு மொழியாக கன்னடம் இருக்க வேண்டும் என்று, கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்புத் தலைவர் டி.ஏ.நாராயண கெளடா வலியுறுத்தினார். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மைசூரு உடையார் மன்னர்களிடம் இருந்து நிலத்தை பெற்றுக் கொண்டு கட்டப்பட்டுள்ள தேவாலயங்களில் வழிபாட்டு மொழியாக கன்னடம் இருக்க வேண்டும். பெங்களூரு கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பெர்னார்ட் ...

மேலும் படிக்க »

ஹபிடாட் திரைப்பட விழா

தில்லி இந்தியா ஹபிடாட் சென்டர், புணே இந்திய தேசிய ஆவணக் காப்பகம் ஆகியவற்றின் சார்பில் சிறந்த இந்திய திரைப்படங்கள் தில்லியில் திரையிடப்பட உள்ளன. இதில் விருமாண்டி, நாயகன், குணா, மெட்ராஸ், ஜிகர்தண்டா, காக்கா முட்டை, குற்றம் கடிதல் ஆகிய 7 தமிழ்ப் படங்கள் உள்பட 13 பிராந்திய மொழிகளில் மொத்தம் 48 படங்கள் திரையிடப்பட உள்ளன. ...

மேலும் படிக்க »

இரண்டு பல்கலை. விண்ணப்பங்களில் திருநங்கைகளுக்கென தனி இடம்

தில்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகிய இரண்டிலும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களில் திருநங்கைகளுக்கு (மூன்றாம் பாலினத்தவர்கள்) என இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. “திருநங்கைகள்’, மூன்றாம் பாலினத்தவர் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராகக் கருத வேண்டும் ...

மேலும் படிக்க »

காக்கா முட்டை: ஒரு பார்வை

காக்கா முட்டை: ஒரு பார்வை

தமிழகத்தில் வட்டார சினிமா என்பது பெரும்பாலும் தென்மாவட்டங்களையோ அல்லது கொங்கு  மண்டலத்தையோ மையமாக வைத்து எடுக்கப்படும்.  அதுவும் அந்த பகுதி மக்களின் வாழ்க்கையோஅல்லது வலியையோ காட்சி படுத்துவது குறைவாகவும் சிலகுறிபிட்ட சாதி பெருமை பேசுவதாகவும் தான் காட்சி  படுத்தப்பட்டுஇருக்கும்.  உலகமயம் அவர்களின் வாழ்வாதாரத்தை சூரையாடுவதைபற்றியோ வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றியோ பதிவுகள்இல்லாமல் தனி மனித சாகசங்களை மையப்படுதியதாக இருக்கும். சென்னை என்றால் பெரும்பாலும் மேட்டிமையான நடுத்தர வாழ்க்கைபற்றியதாகவும், கிராமத்தில் இருந்து வருபவர்களை ஏமாற்றுபவர்களாகவும் பதிவு செய்து கொண்டிருக்கும்.  பெரும்பாலும்சென்னையில் பூர்வ குடிகள் வட சென்னையில் மட்டுமே இருப்பதாவும் காட்டப்படும்.  காக்கா முட்டை இவை  எல்லாவற்றில் இருந்தும் மாறுபட்டு தெ ன் சென்னையின் மையப்பகுதியில்சைதாபேட்டையை ஒட்டிய குடிசை பகுதி குழந்தைகளின் வாழ்க்கை தான் காக்கா முட்டை. காதலர்கள், டூயட்,  குத்து பாட்டு இல்லாத 90 நிமிடம் மட்டுமே உள்ளமுதல் படம். இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுசின் கூட்டுதயாரிப்பில் மணிகண்டன் இயக்கி வெளிவந்திருக்கும் காக்கா முட்டைதிரைப்படம் ஏற்கனவே தேசிய விருது  பெற்றிருந்ததுகுறிப்பிடத்தக்கது. சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை பின்புறம் இருக்கும்குடிசை பகுதியில் இருக்கும் சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகவைத்த படம். படத்தின் துவக்கத்தில் வரும் செல் செல் பாடல்அவர்களின் வாழ்க்கையில் உள்ள கொண்டாட்டங்களைபோராட்டங்களை சொல்லி துவங்குகிறது. சிறையில் இருக்கும் தன்கணவனை மீட்க பணம் திரட்டுவதற்கு  பாடுபடும் அம்மா, பள்ளிபடிக்க வேண்டிய வயதில் ஒரு  நாள் சொர்ப்ப வருமானம் பத்துருபாவிற்காக மிக ஆபத்தான வேலையான தண்டவாளத்தில் விழுந்துகிடக்கும் கரி பொறுக்கும் சிறுவர்கள். தினமும் பக்கத்தில் சும்மா கிடக்கும் இடத்தில் இருக்கும் மரத்தில்இருந்து காக்கா முட்டை எடுத்து குடிக்கிறார்கள். காக்காவிற்கு சோறுவைத்துவிட்டு  மேல் மரத்தில் ஏறி பெரியவன் காக்கா முட்டைகளைபார்த்து மகிழ்ச்சி அடைகிறான். மொத்தம் மூன்று இருக்கிறது உனக்குஒன்னு எனக்கு ஒன்னு காக்காவிற்கு ஒன்னு என்று அவர்கள் பிரித்துக்கொள்கிறார்கள். உலகமய சூழலில் நுகர்வு வாழ்க்கை தங்கள் கண் முன்னால் தங்கள்நிலத்தில் ஒதுக்கப்பட்ட தங்களை ஏக்க பார்வை பார்க்கவைக்கும்வலியை படத்தின் பல காட்சிகள் நமக்கு கடத்துகிறது. தானும்செல்போன் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவாவும் அதனால் ஜெயிலில் இருந்து வரும் அப்பாவை போன் வாங்கிட்டு வர சொல்லவேண்டும் என்று மீண்டும் மீண்டும் தன் தாயிடம் கோரிக்கையாகவைக்கிறான் மூத்தவன். அவர்கள் காக்கா முட்டை எடுக்கும் இடத்தில்ஒரு கட்டிடம் கட்டுகிறார்கள்அதற்கு அங்கு இருக்கும் மரத்தைவெட்டுகிறார்கள். இந்த இடத்தில் அவர்கள் செல்கிறபோது இந்தஇடத்தை கொடுத்தாச்சு என்று  வாட்ச்மேனிடம் இது எங்க ஏரியா என்று சொல்லும் அந்த சிறுவர்களால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை. இப்படிதான் சிறப்பு  பொருளாதார மண்டலங்களுக்காக   நிலம் மரம் அறுக்கப்பட்டு விழும்போது எல்லோரும் கை தட்டுகிறார்கள்.இவர்கள் மட்டும் அழுகிறார்கள் மரமோ, மலையோ, கடலோ, நதியோஅதோடு தொடர்புடையவர்களால் மட்டுமே அது அழியும் வலியைஉணர முடியும்.. . ஒரு வழியாக மூன்னூறு ரூபாயோடு அவர்கள் பிசா கடைக்குபோகும்போது குப்பத்து பசங்க என்று அவர்களை கடையின்வாட்ச்மேன் தடுக்கிறார். பணம் சேர்த்து சாப்பிட முடியாதவருத்தத்துடன் அவர்களது பிரண்டான ரயில்வே ஊழியரிடம் எப்படிஎங்கள குப்பத்து பசங்க என்று கண்டு பிடித்தார்கள் என்று கேட்கிறார்கள். உன் சொக்காவை பாத்து கண்டுபிடித்திருப்பார்கள்என்று கூறுகிறார். அப்போது அவர்கள் புதுசட்டை வாங்கமுடிவெடுக்கிறார்கள்.. அதற்கு பணம் சேர்க்க துவங்குகிறார்கள்.அப்பொழுது அந்த வசதியான வீட்டு பையன் அவன் சாபிட்ட மிச்சபிசாவை கொடுக்கும் போது பெரிய காக்கா முட்டை மறுக்கிறான்ஏழைகள் என்றால் எது கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள் என்றபொது புத்திக்கு அவர்களின் சுய மரியாதையை காட்டுகிறார்கள். எச்சபிசாவையாடா  சாப்பிடுவ என்று கேட்கிறான். இதற்கு இடையில் சில நேரங்களில் பிசாவிற்காக ரயிலில்செல்பவர்களிடம் கம்பால் அடித்து பிடுங்கும் முயற்சியில் மனசாட்சிஇடம் கொடுக்காமல் திரும்பும் காட்சி நேர்மையை காட்ட  பயன்படுகிறது சிட்டிசெண்டரின் பிரம்மாண்டமான தோற்றமேஅவர்களை பயமுறுத்துகிறது. சத்தியமா நம்மல உள்ள விடமாட்டார்கள் என்று  சொல்லிவிட்டு  உக்காந்து விடுகிறார்கள். இந்தசென்னை அதன் பிரமாண்டமும் இந்த மண்ணின் உண்மையானமக்களை அதில் இருந்து அந்நியப்படுத்தி வைத்து அவர்கள் கண்முன்னாலேயே ஆடம்பரமான வாழ்வையும் அவர்களுக்குகுழந்தை பருவத்திலேயே தாழ்வு மனபான்மையை எந்த அளவிற்குவிதைத்துள்ளது என்பதையும் உணர முடிகிறது. மேலும்,பிரம்மாண்டங்கள் எல்லாம் மக்களுக்கு எதிரானதுதான் என்றுபேரா.தொ.ப  சொல்வது நினைவுக்கு வந்தது. அந்த பகுதி  எம். எல் எ வரை  எல்லோரும் அவர்கள் பிரச்னையைவியாபரம் பேசுகிறார்கள் அவன் அம்மா அவகளை  தேடி அலைகிறாள்  இல்லாதவங்க முன்ன கடைய  கட்டி ஆசை  உண்டாகி கடுபேத்துரானுக என்று அவர்கள் அம்மா பேசும் வசனம் பெரும் ராசிவ்காந்தி சாலை இரு  பக்கமும் இருக்கும் குடிசை வாசிகள் முதல்சென்னை முழுவதும் வாழ்வாரத்தை  இழந்து ஆடம்பரத்தைஅன்னாந்து பார்க்கும் எழைகளின் குரலாக இருக்கிறது. இருதியில் அவர்கள் பீசா  ...

மேலும் படிக்க »
Scroll To Top