Author Archives: naresh baskaran

ஜெருசலேம் விவகாரம்: இஸ்ரேல் – அமெரிக்காவை கண்டித்து மேற்கு ஆசிய நாடுகளில் போராட்டம்

ஜெருசலேம் விவகாரம்: இஸ்ரேல் – அமெரிக்காவை கண்டித்து மேற்கு ஆசிய நாடுகளில் போராட்டம்

ஜெருசலேம்: இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி ...

மேலும் படிக்க »

தேர்தல் விவாதத்தில் எங்களை இழுப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் : பாக்கிஸ்தான் கண்டனம்

தேர்தல் விவாதத்தில் எங்களை இழுப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் : பாக்கிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. கூட்டத்தில் பேசும் போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி காங்கிரஸ் தலைவர் அகமது படேலை முதல்வராக்க முயற்சித்து வருகிறார் என்றும், பாகிஸ்தான் நாட்டு தூதர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் ரகசியமாக சந்தித்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். பிரதமராக இருந்து கொண்டு மோடி ...

மேலும் படிக்க »

ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இன்று அதிகாலை 4:28 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ...

மேலும் படிக்க »

குமரி மீனவர்கள் போராட்டத்தில் இணைந்து கொண்ட ஜி.வி.பிரகாஷ்

குமரி மீனவர்கள் போராட்டத்தில் இணைந்து கொண்ட ஜி.வி.பிரகாஷ்

கடந்த நவம்பர் 30-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. புயலின்போது மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். ஒக்கி புயலால் கடலில் மயமான தமிழக மீனவர்களை மீட்கும் பணியில் மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்படவில்லை என்று குமரி மீனவ மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். காணாமல் போன ...

மேலும் படிக்க »

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் நடிகர் பொன்வண்ணன்

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் நடிகர் பொன்வண்ணன்

ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 23-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் போட்டியிடப்போவதாக விஷால் திடீரென அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ...

மேலும் படிக்க »

கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி

கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒக்கி புயலில் சிக்கி மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி இதுவரை என்னவென்று தெரியவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு உடனே அறிவிக்கவேண்டும். மேலும் காணாமல் போன ...

மேலும் படிக்க »

நாகை கலெக்டர் அலுவலகம் முற்றுகை – மீனவ பெண்கள் போராட்டம்

நாகை கலெக்டர் அலுவலகம் முற்றுகை – மீனவ பெண்கள் போராட்டம்

கீழ்வேளூர்: கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் ஒக்கி புயலில் சிக்கி மாயமானார்கள். காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி குமரி மாவட்டத்தில் மீனவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து ஓக்கி புயலில் சிக்கி நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதுவரை அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி. வரி மற்றும் பணமதிப்பிழப்பு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்

ஜி.எஸ்.டி. வரி மற்றும் பணமதிப்பிழப்பு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்

மும்பை: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரும், பொருளாதார நிபுணருமான ஒய்.வி. ரெட்டி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பொருளாதார நிலை சீரான போக்கில் இல்லை. இது 7.5-ல் இருந்து 8 சதவீதமாக வரும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதை இப்போதே கணிக்க முடியாது. அடுத்த 24 மாதங்களுக்கு இது சாத்தியம் இல்லை என்றே தோறுகிறது. ஜி.எஸ்.டி. ...

மேலும் படிக்க »

இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; இந்தியா படுதோல்வி

இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; இந்தியா படுதோல்வி

இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இந்திய ...

மேலும் படிக்க »

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 27 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 27 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: நேற்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “மத்திய அரசு பணிகளில் மண்டல் கமி‌ஷன் பரிந்துரையின்படி அறிவிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை” என்றும், “1.1.2017 வரை மத்திய அரசின் எந்தத் துறையிலும் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை” என்றும் ஒரு ஆங்கில ...

மேலும் படிக்க »
Scroll To Top